Tamil Christian Gospel Page
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

உங்கள் வருகைக்கு நன்றி.உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்
Welcome, Today is:

எச்சரிக்கையாயிருங்கள்!


உங்கள் செய்கைகளின் பலனை இழந்து போகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவன் எவனும் தேவனை உடையவனல்ல கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

மேலும்...

 

கர்த்தருக்குள் பிரியமானவர்களே !
பிறப்பிலே கத்தோலிக்க மதத்தைச்சேர்ந்த நான் நீண்ட காலமாக விக்கிரக வழிபாட்டிலே என் வாழ்கையைக் கழித்துக்கொண்டிருந்தேன்.

அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார் தமக்குச் சித்தமானயாவையும் செய்கிறார். அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும், பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது, அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது, அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது, அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது, தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள் (சங்.115:3-8)

சிறு வயதிலிருந்தே வெளிநாட்டில் நீண்ட காலங்களாகத் தனிமையிலே வசதியாக வாழ்ந்து வந்தேன். 1994 ம் ஆண்டளவில் சாத்தான் என்னிடமிருந்தவைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கத் தொடங்கினான். இறுதியிலே கடனும் பெருகி புறஜாதியினரின் இழிவுப் பேச்சுக்கு ஆளாகி வாழ்க்கை வெறுத்து விட்ட எனக்கு தற்கொலையே சிறந்த வழியாகத் தோன்றியது. 3 தடவைகள் தற்கொலை முயற்சி செய்து 3வது தடவை சாவின் உச்சக்கட்டத்தை அடைந்தேன். அதிலிருந்தும் கர்த்தர் தன்னை அறியாத மக்களைக் கொண்டு என்னைக் காத்துக் கொணடார். இதிலே தோல்வியைக் கண்ட நான் இங்கிருக்க மனதில்லாமல் இலங்கைக்கே திரும்பிச் சென்றேன்.

என் குடும்பத்தில் எல்லோரும் 90-92 ஆம் வருடங்களில் இரட்சிக்கப்பட்டு விட்டார்கள்(என்னைத்தவிர). இலங்கைக்குத் திரும்பிச் சென்ற போது அங்கே 2004 ம் ஆண்டு சகோ-போல் தினகரன் அவர்கள் வருகை தந்திருந்தார். எல்லோருமாக அங்கே போகும் போது என்னையும் அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கே பின்னாலே நின்று கொண்டு நான் செய்த பரிகாசம் சொல்ல முடியாது.

அந்தப் பெரிய கூட்டத்திலேயும் சகோ-போல் என்னைப் பெயர் சொல்லி அழைத்து பின்னாலே இருந்து குழம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் அமைதியாயிருங்கள் கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்று என்னென்னமோ சொன்னார். நான் அவைகளுக்கு செவி கொடுக்கவில்லை. எல்லோரும் உனக்குத்தான் சொல்கிறார் என்றார்கள் அதற்கு நான் இவ்வளவு பெரிய கூட்டத்தில் என் பெயர் இவருக்கு எப்படித் தெரியும் எனக்கு மட்டும் தானா இந்தப் பெயர் உண்டு வேறு யாரையோ சொல்கிறார் என்று அசட்டை செய்து விட்டேன். அந்தக் கூட்டத்திலேயே கர்த்தர் என்னைத் தொட்டு விட்டார் என்று எனக்குத் தெரியாது.

அதே வருடமே திருமணமானது. அதே வருடமே இங்கு திரும்பி வந்தேன். வந்தவுடனேயே இங்குள்ள "கிருபையின் ஆலயம்" என்ற சபையிலே கர்த்தர் அங்கத்தவராக இணைத்துக்கொண்டார். கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. அதே வருடமே நல்ல வேலை கிடைத்தது. அதே வருடமே என் விலா எலும்பையும் இந்த நாட்டிற்கு கர்த்தர் எடுத்துத் தந்தார். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது-ஆமென். இப்பொழுது மனைவி குழந்தைகளுடன் மிகவும் இனிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்.

சினிமா உலகத்திற்கான mp3 பாடல்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையத் தளத்தை 2005 களில் தேவ நாமத்தை உயர்த்தும் தளமாக மாற்றிக் கொண்டேன்.

சாத்தானால் என்னிடமிருந்து பிடுங்கப்பட்டவைகளை விட இப்போது கர்த்தர் என்னை அதிகமாக ஆசீர்வதித்துள்ளார். ஆமென்.

இதிலே என்னைப்பற்றிக் குறிப்பிட்டாலும் கர்த்தர் எனக்குச் செய்தவைகளை சாட்சியாகக் குறிப்பிட்டு கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்தி உயர்த்துகிறேன். ஆமென்

நீங்கள் எப்படியான பாவ வாழ்வு வாழ்ந்தாலும் அதனை மன்னித்து உங்களுக்குப் புதுவாழ்வையும் நித்திய மோட்ச சந்தோஷத்தையும் தருவதற்கு இயேசு உங்களை அழைக்கிறார்.

கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து சீக்கிரமாய் மீண்டும் வருகிறார். அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

என்னைப்போன்ற எத்தனையோ ஆத்துமாக்களைக் காத்து வழி நடத்தும் இம்மானுவேலர் உங்களையும் காத்திடுவார். ஆமென்.

பிரியமுடன்
சகோ-றொபின்சன்.