கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

உங்கள் வருகைக்கு நன்றி.உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்
Welcome, Today is:


கடைசிக் காலம் அண்மித்து விட்டது!

பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
(மத்தேயு 24:3 )

1).
மலைப்பாம்பு ஜோடிக்கு திருமணம்

கம்போடியாவின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வித்தியாசமான ஒரு திருமண விழாவை கொண்டாடினர். ஒரு மலைப்பாம்பு ஜோடிக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்தனர். தமது கிராமத்துக்கு இந்தத் திருமணம் நன்மைகளைக் கொண்டு வரும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

செம்ரூன் என்ற மணமகன் மலைப்பாம்புக்கும், ரொங்பிச் என்ற மணமகள் மலைப்பாம்புக்கும் தான் திருமணம் நடந்தது.

இந்தத் திருமண நிகழ்வை சுமார் ஆயிரம்பேர் கண்டு மகிழ்ந்தனர். எமது கிராமத்தைவிட்டு தீய சக்திகள் நீங்கி நல்லவை பெருக வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திருமணச் சடங்கை நடத்தினோம் என்று நெத் வீ என்ற 41 வயதான கிராமவாசி கூறினார்.

இவரின் வீட்டில் 1994 முதல் வளர்க்கப்பட்டு வருவது தான் செம்ரூன் என்ற மணமகன் மலைப்பாம்பு. இது ஒரு விரல் அளவு கொண்டதாக இருக்கும் போது அவரின் மீன்பிடி வலையில் சிக்கியது. இப்போது வளர்ந்து மணமகன் வயதை அடைந்துள்ளது.

ஒரு மாதத்துக்கு முன் காணாமல் போயிருந்த இது திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு தான் மீண்டும் வீடு திரும்பியிருந்தது. குறி கூறும் சிலரின் ஆலோசனைக்கு அமையவே கிராமத்துக்கு நன்மை கிடைப்பதற்கான ஒரு வழியாக இந்தத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

கம்போடிய சம்பிரதாயங்களின் படி இந்தத் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு பௌத்த மதகுருமார் ஆசியும் வழங்கினர். திருமணத்துக்குப் பின் இரண்டு மலைப்பாம்புகளும் ஒரே கூட்டுக்குள் அடைக்கப்பட்டன.

அப்போது மக்கள் கூடியிருந்து வாழ்த்தியதோடு பணம் உட்பட பரிசுகளையும் வழங்கினர். கம்போடிய கிராமப் பகுதிகளில் பௌத்த மதம் பின்பற்றப்பட்டாலும் அங்கு மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை.

Jan 2011
——————————

2).
தென்கொரிய நாட்டில் உள்ள முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் ஆங்கில பாடம் கற்பித்துக் கொடுக்க ஆரம்பித்து உள்ளன.

30 ரோபோக்கள் வரை இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. ரோபோ கைத்தொழில் துறையை வளர்த்து எடுக்கும் நிகழ்ச்சி நிரலின் கீழ் இத்திட்டம் அந்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆசிரிய ரோபோக்களில் ஒருவருக்குப் பெயர் இங்கேய். முட்டை வடிவத்தில் ஆன உருவம் உடையவர். வெள்ளை நிறம் கொண்டவர். டேய்கு நகரத்தில் உள்ள 21முன்பள்ளிகளில் கற்பிக்கின்றார். ஆசிரிய ரோபோக்களினது உயரம் ஒரு மீற்றர்.

இவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு TV display panel பொருத்தப்பட்டு உள்ளது. நடமாடும சக்கர கால்கள் நான்கை ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர். இவர்களால் இக்கால்களின் துணையுடன் நடந்து திரிகின்றமை முடியும்.

இந்த ரோபோக்களுக்கு புத்தகங்களை வாசிக்கின்றமைக்கும், பாடல்களுக்கு ஏற்ப தலையையும், கைகளையும் அசைக்கின்றமைக்கும், கால்களை ஆட்டி நடனமாடுகின்றமைக்கும் முடியும்.

ஒவ்வொருவருக்கும் அழகான பெண்களின் முகம் ஒவ்வொன்று கொடுக்கப்பட்டு உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு ஆங்கில் ஆசிரியர்கள் ஏராளமானோர் தென்கொரியாவில் உள்ளனர். இவர்கள் ரிமோட் கொன்ரோல் மூலம் ரோபோக்களை இயக்குகின்றனர்.

கமராக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டு ஆசிரியர்களின் முக பாவங்களை உள்வாங்கி ரோபோக்களில் வெளிப்படுத்துகின்றன. பாடம் கற்பித்துக் கொடுக்கின்றமை மட்டுமன்றி ஆசிரிய ரோபோக்கள் மாணவர்களுக்கு நடனம், விளையாட்டு ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

ஆசிரிய ரோபோக்களின் அறிமுகத்துக்கு முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதனால் கல்வி மீதான விருப்பம் இம்மாணவர்கள் மத்தியில் அதிக்ரிக்கும் என்று தென்கொரிய நிபுணர்கள் நம்புகின்றனர்.


Jan-2011 
——————————

3).
பெண் தேவையில்லை “ஆண்கள் மூலம் குழந்தை பெற முடியும்” விஞ்ஞானிகள் தகவல்

குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றனர். ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண் துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது “ஸ்டெம்செல்” மூலம் பல அரியவகை அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

“ஸ்டெம்செல்” சிகிச்சையின் மூலம் கொடிய நோய்கள் கூட குணப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அதிநவீன “ஸ்டெம் செல்” தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகள் மூலம் குட்டி எலிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். டெக்சாஸ் இனப்பெருக்க விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் மனிதர்களிலும் பெண் துணையின்றி ஆண்களே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போன்று ஆண்கள் இல்லாமல் பெண்களே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இது ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு வசதியாக அமையும்.

டிசம்பர் 2010

——————————

4).
காதலர் தினம்: கழுதைகளுக்கு திருமணம்

காதலர் தினமான இன்று இந்து முன்னணி அமைப்பினர் நாய்களூக்கும் கழுதைகளூக்கும் கல்யாணம் நடத்தி வைத்தனர்.

 காலை ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் இரண்டு கழுதைகளுக்கு மாலை மாற்றி காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

நகர் தலைவர் மாரியப்பன், நகர் அமைப்பாளர் சப்பானி,ஆர்.எஸ்.எஸ்., நகர் அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

14, பிப்ரவரி 2010 www.nakkheeran.in

——————————

5).
தவளைக்கும், சிறுமிக்கும் திருமணம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும், சிறுமிக்கும் திருமணம் நடந்தது.
ஊர் நலனுக்காக கிராமத்தினர் கூடி இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தனர். அங்குள்ள குளத்தில் இருந்து ஒரு தவளையைப் பிடித்து வந்து சீர்வரிசை தட்டுகளுடன் மாப்பிள்ளை, மணமகள் ஊர்வலத்துடன் சிறுமிக்குத் தாலிகட்டி முகூர்த்தம் நடந்தது.

18.01.2009 www.nakkheeran.in

——————————

6).
நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி என்ற பெண் எனத் தெருவித்துள்ளார். கந்தானை வித்தியாலோக மகாவித்தியாலையத்தில் கல்வி பயிலும் இந்த சிங்கள மாணவர் கடந்த 25 ஆம் திகதி முதல் தான் பெண் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் யுத்தம் தொடர்பாக தமிழில் பேசி வருவதாக பாடசாலையின் அதிபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இத தொடர்பாக கருத்துத் தெரிவித்த காவற்துறையினர் இந்தச் சிறுவனின் பெற்றோர் சிங்களவர் எனவும், இவர்கள் கந்தானை கபல்லகஸ் சந்திப் பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 13 வயதான லக்ஸ்மன், அரவிந்த என்ற இந்தச் சிறுவனுக்கு சகோதரர் ஒருவர் உள்ளார் என்றும்; குறித்த சிறுவன் தான் ஒரு பெண்பிள்ளை எனவும் பெண்கள் அணியும் பாடசாலை உடையை அணிய அதிபரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது தனது பெயர் சிறீராமச்சந்திரன், ராஜி எனவும்; தகப்பனின் பெயர் ராமச்சந்திரன், ரமேஸ்குமார் எனவும்;தாயின் பெயர் ராமச்சந்திரன், ராசான் எனவும் இந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் கடந்த 12 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்டதாக இவர் கூறியுள்ளார் இதே வேளை தற்பொழுது முழுமையாக சிங்கள மொழியை மறந்து தமிழிலேயே உரையாடுவதாகவும் தனது தற்போதைய சகோதரனைத் தெரியாது எனவும் இவர் கூறி வருகிறார்.
இதற்கிடையில் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவல் நிலையத்தின் சிறுவர் நலப்பிரிவின் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சிறுவன் முற்பிறவியில் யாழ்ப்பாணம் சிறீபத்ததிரகாளி அம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். தனது தந்தை தன்னையும் தாய், மற்றும் சகோதரனை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில் தாய் தம்மை அழைத்துக் கொண்டு நீர்கொழும்பு பிரதேசத்தில் சென்று குடியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது சகோதரர் ரமேஸ்குமார் என்பவர் றைகம் என்ற நிறுவனத்தின் பணியாளராக கடமை ஆற்றியதாகவும், ஒரு வருடத்தின் பின் தாயார் வெளிநாடு சென்றவுடன் சகோதரர் தன்னை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த போது சனிக்கிழமை தினம் ஒன்றில் வீடுகள் நெரிசலாக உள்ள பிரதேசத்தில் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது தான் உயிர் இழந்ததாகவும் இந்தச் சிறுவன் தெரிவிப்பதாக காவற்துறையின் சிறுவர் நல அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை காளி கோவிலுக்கு நேத்திக்கடனைச் செலுத்த தனது தாயார் வரும் வரை தான் காத்திருப்பதாகவும் தனது சகோதரர் தான் விளையாட பந்து கொண்டு வருவார் எனத் தெரிவித்து வருவதாகவும் இந்த மாணவன் தெரிவிக்கும் நிலையில் தற்பொழுது இவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.