Tamil Christian Gospel Page
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

உங்கள் வருகைக்கு நன்றி.உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்
Welcome, Today is:

எச்சரிக்கையாயிருங்கள்!


உங்கள் செய்கைகளின் பலனை இழந்து போகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவன் எவனும் தேவனை உடையவனல்ல கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

மேலும்...

 
இறுதிக்கால சபையின் நிலை
சபை தனது நேசரின் வருகையைக் காத்துக் காத்துக் தவித்திருக்கும் காலமே சபையின் இறுதிக் காலமாகும்.

சபையின் எடுத்துக்கொள்ளப்படல் எப்போ நடக்கும் என்று தெரியாது அது இரகசியமாக நிகழும் அதன் பின்பு இஸ்ரவேலரின் தொடர்பிலான தேவதிட்டங்களும் நிறைவேறும். இஸ்ரவேலரின் தொடர்பில் இறுதி நாட்கள் எனக் குறிப்பிடப்படும் போது அது ஆயிரம் ஆண்டு ஆட்சியைக் குறிப்பிடும் (ஏசா 2:1-5) சபையின் தொடர்பில் இறுதி நாட்கள் எனக் குறிப்பிடப்படும்போது. அநியாயம் மற்றும் விசுவாச இழப்புக்கள் மலிந்த கொடிய காலங்களாகும் (2தீமோ 3:1-5,   1தீமோ 4:1).
உபத்திரவ காலம் சபையின் எடுக்கப்படுதலைத் தொடர்ந்து நிகழ்வதால் உவத்திரவ காலத்துக்கான ஆயத்தங்கள் சபையின் இறுதிகாலத்தைச் சுட்டிக்காட்டும் அடையாளங்களாகும்.
மேலும் விசுவாசத்தை விட்டு விடும் கொடிய நிலையும் உண்டாகும்
அவை பின்வரும் நிலைகளில் அமையும்.

  • தேவனை மறுதலித்தல் (லூக் 17:26, 2தீமொ 3:4 5)

  • நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
  • கிறிஸ்துவை மறுதலித்தல் (1யோவா 2:18 - 4:3, 2பேது 2:6)

  • பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;

  • கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மறுதலித்தல் (2பேது 3:3,4)

  • முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
  • விசுவாசத்தை மறுதலித்தல் (1தீமோ 4:12 , யூதா 3)

  • உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.

  • ஆரோக்கிய உபதேசத்தை மறுதலித்தல் (2தீமோ 4:3, 4)

  • ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

  • வேறுபிரிந்து வாழ்தலை மறுதலித்தல் (2தீமோ 3:1-7)

  • மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

    பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.

  • கிறிஸ்தவ சுதந்திரத்தை மறுதலித்தல் (1தீமோ 4:3,4)

  • விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள். தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.

  • ஒழுக்க வாழ்வை மறுதலித்தல் (2தீமோ 3:1-8,13. யூதா 18)

  • மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

    பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
    யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.

  • அதிகாரத்தை மறுதலித்தல் (2தீமோ 3:4)

  • துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
இவையனைத்தும் லவோதிக்கேயா சபையின் பண்புகளுடன் கலந்து நிற்பதைக் காணமுடியும்.
தற்காலத்தில் மலிந்து காணப்படும் சபை அரசியல் அமைப்புகள் ஆசாரச் சுமைகள் வசனத்தைப் பற்றிய தவறான விளக்கவுரைகள், வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும், சபையில் இடங்கொடுக்கும் நிலை. மாயங்கள் மனசாட்சியில் சூடுண்ட பொய் போதகர்களின் தன்னலப் போதனைகள்; திருமண விலக்குகள்; சில உணவு வகைகளை விலக்கி சரீர சுத்திகரிப்பை மேன்மைப்படுத்துதல். உலக தத்துவ ஞானங்களை உபதேசங்களாகப் புகுத்துதல்; வருடம்தோறும் புதுப்புது உபதேசங்கள், புதுப்புது ஞானஸ்நானங்கள், புதுப்புது வகை அபிஷேகங்கள், யோகா பயிற்சிகள், பெயர் அழைப்புப் போதனைகள், வாந்தியெடுத்தல், கர்ஜித்தல், எண்ணெய், கர்ச்சீப் ஆகியவற்றை அற்புதப் பொருட்களாக விளம்பரம் செய்தல். ஊதி விழுத்துதல், போன்ற மாய வித்தைகள் செய்தல். குறி சொல்லுதல், சரியான போதனையை மக்கள் உணராதவாறு தடுத்துப்போடுதல், பட்டங்கள், தொழில்கள், அதிகாரங்கள் என்ற நிலைக்கு சுவிசேஷப் பணியை வேலைவாய்ப்புப் பணியாக்குதல். சபைப்பிரிவு மேன்மைபாராட்டல்கள், சபை ஙாற்றாண்டு விழாக்கள் ஜாதி சபைகள் போன்றவை எல்லாம் இறுதிக்கால சபையின் (அவ)லட்சணங்களேயன்றி வேறென்ன?