கிறிஸ்தவர்கள் கர்ப்பத்தடை செய்யலாமா?
அனேகம்
கிறிஸ்தவர்களால் கேட்கப்படுகின்ற கேள்வி இதுவாகும். இந்தக் கேள்விக்கு ஆம்
இல்லை என்று இரண்டு வார்த்தையில் பதில் சொல்ல முடியும். ஆனால் அது சரியாக
இருக்காது. வேத விளக்கத்தோடு விடையளிப்பதே சிறந்த பதிலாக இருக்கும்.
அரம்பத்தில் இருந்து பார்ப்போம் என்றால் ஆதியாகமத்தில் தேவனின் சிருஸ்டிப்பின்
போது தேவன் சிருஸ்டித்த மனிதனிடம் பல்கிப்பெருகி பூமியை நிரப்புங்கள் என்று
சொல்வதைப் பார்க்கலாம்
ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி பூமியை
நிரப்பி அதைக் கீழ்ப்படுத்தி சமுத்திரத்தின் மச்சங்களையும்
ஆகாயத்துப் பறவைகளையும்ரூபவ் பூமியின் மேல் நடமாடுகிற சகல
ஜீவஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி தேவன் அவர்களை
ஆசீர்வதித்தார்.
இந்த வார்த்தையிலிருந்து பல்கிப் பெருக வேண்டும் என்பது தேவனின் சித்தம் என்பது
தெளிவாகிறது. தேவன் ஜலத்தினால் உலகத்தை அழித்த போது காக்கப்பட்ட நோவாவின்
குடும்பத்தாருக்கும் அதே கட்டளையை கொடுப்பதை நாம் ஆதியாகமம் 9:1ல்
பார்க்கலாம். பின்பு தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் ஆசீர்வதித்து:
நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார். பல்கிப் பெருகவேண்டும்
என்பது தேவனின் திட்டம். அதற்கு எதிராக வருவதெல்லாம் யாருடைய திட்டம்
என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதியாகமம் 9:7லும் கூட நீங்கள் பலுகிப்
பெருகி பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார். ஆதியாகமம்
35:11ல் யாக்கோபைப் பார்த்து இதே வார்த்தையைச் செல்வதைப் பார்க்கலாம். பலுகிப்
பெருகுங்கள் பலுகிப் பெருகுங்கள் என்றுதான் தேவன் சொல்கிறார். அன்றைக்கும்
அதைத்தான் சொன்னார். இன்றைக்கும் அதைத்தான் சொல்கின்றார். என்றைக்கும்
அதைத்தான் சொல்வார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் மனம் மாற
மனிதன் அல்லவே. மனிதனை மட்டுமல்ல ஆதியாகமம் 1:8, 8:17 ஆகிய வசனங்களில்
மீன்கள் பறவைகள் மிருகங்கள் மாம்ச ஜந்துக்கள் ஆகியவற்றுக்குக்கூட தேவன்
அவ்விதமான கட்டளையைக் கொடுக்கிறதைப் பார்க்கிறோம். அவைகள் இன்நாள் வரை
அந்தக்கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் கீழ்படிய
மறுக்கிறான். மறுப்பது மட்டுமல்ல தன் மீறுதலுக்கு நியாயம் வேறு கற்பிக்கிறான்.
என்ன செய்வது? ஆதி முதலாய் கீழ்படியாமல் போவதே அவனுக்கு பழக்கமாகி விட்டது.
கரு உருவாவதைத் தடுப்பதோ உருவான கருவை அழிப்பதோ யாருடைய தூன்டுதல்? என்று நாம் விளங்கிக்
கொள்ள தவறியதுதான் இன்று தடை செய்யலாமா? என்ற கேள்வியை நம்மைக் கேற்க
வைக்கிறது. வேதத்தில் இரண்டு சம்பவங்களை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்.
அப்போது நீங்கள் அதை விளங்கிக்கொள்ளக்கூடும். யாத்திராகமம் 1:16 நீங்கள்
எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது அவர்கள் மணையின்மேல்
உட்கார்ந்திருக்கையில் பார்த்து ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள்
பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான். மருத்துவிச்சிகளைக் கூப்பிட்டு
பார்வோன் இவ்hறான ஒரு கட்டளையை இடுகின்றான். பார்வோன் சாத்தானுக்கு
ஒப்பாக சித்தரிக்கப்படுகிறான். யாத்திராகமம் 1:22 அப்பொழுது பார்வோன்
பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும் பெண்பிள்ளைகளையெல்லாம்
உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.
ஆரம்பத்தில் மருத்துவிச்சிகளோடு பேசியவன் இப்போது ஜனங்கள் எல்லோருக்கும்
கட்டளையிடுகிறான்
மத்தேயு 2:16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த
கோபமடைந்து ஆட்களை அனுப்பி தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய்
விசாரித்த காலத்தின்படியே பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த
இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான். இந்த இரண்டு
விடயங்களிலும் ஒரு ஒருமைப்பாட்டை நாம் காணலாம். எகிப்தின்
அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை மீட்க மோசே என்னும் இரட்சகனை
அவர்களுக்குள் இருந்து எழும்பப்பண்ண தேவன் சித்தம் கொண்டிருந்தார். அதை அறிந்த
சாத்தான் அந்தத்திட்டத்தை முறியடிக்க ஓரு திட்டம் போடுகிறான் அந்தத்திட்டம்
தான் பார்வோன் மூலமாக அறிமுகப்படுத்தப்பட் திட்டமாகும். அதேவிதமாக
உலகரட்சகராகிய நமது ஆண்டவர் வெளிப்படுவதை தடுக்க ஒரு திட்டம் போடுகிறான். இரண்டு
வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொலை செய்வதே அந்தத்திட்டம். ஆனால் இந்த இரண்டும்
தேவன் சித்தப்டியே நடந்து முடிந்தது. இதே சதித்திட்டத்தைத்தான் இப்போது
கர்ப்பத்தடை என்ற அலங்கரிக்கப்பட்ட வார்த்தைக்குள் மறைத்து செய்து
கொண்டிருக்கிறான். முன்னர் பிறந்த பின் கொலை செய்தான். ஆனால் இப்போது
பிறப்பையே தடைசெய்கின்ற மாதிரி செயல்ப்படுகின்றான்.
பிரியமான சகோதரியே சகோதரனே !
கிறிஸ்தவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் கிறிஸ்துவுக்குள்ளாகத்தானே
வளர்க்கப்படுவார்கள்;. அது கிறிஸ்துவுக்கு ஆதாயம் அல்லவா? ஒருவேளை அது வளர்ந்து
பெரியவனாகி முறட்டாட்டம் பண்ணலாம். அப்படியிருந்த போதும் அது கிறிஸ்துவுக்கு
ஆதாயம்தான். ஒருவேளை அனேகரை இரட்சிப்புக்குள்ளாக நடத்தும் ஒரு
ஊழியக்காரணாகவோ ஊழியக்காரியாகவோ வரலாம் அல்லவா? யாருக்கத்தெரியும்.
தேவன் அந்தப்பிள்ளையை எப்படி வழிநடத்த சித்தம் கொண்டிருக்கிறாரோ? எப்படி முடிவு
செய்வது. நம்பெற்றோர் இந்தக்காரியத்தை (கர்ப்பத்தடை) செய்திருந்தால் இன்றைக்கு
தேவ சேனையில் நம்முடைய தொகை குறைந்திருக்குமே. நம்முடைய இடங்கள்
வெற்றிடங்களாய் இருந்திருக்குமே. ஆண்டவருடைய மறைமுகமான திட்டங்களுக்கு
இப்படிப்பட்ட காரியம் எப்போதும் எதிராகவே அமையும். இப்படிப்பட்ட காரியங்கள்
பிசாசின் தந்திரங்களேயாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சங்கீதம் 127:4-6
இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி அவரால்
கிடைக்கும் பலன்.
5.வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு
ஒப்பாயிருக்கிறார்கள்.
6.அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன்
பாக்கியவான் அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே
பேசுவார்கள். இந்தப் பலன் இந்தச்சுதந்திரம் உங்களுக்கு வேண்டியதில்லையா? இந்த
சங்கீதத்தை சற்று அமைதியாக தியானித்துப்பாருங்கள். இன்று சபைத்தலைவர்களும்
தங்கள் மனைவிகள் சத்திர சிகிச்சைமூலம் கருத்தடை செய்து கொள்வதை
அனுமதித்திருக்கிறார்கள். சாதாரண விசுவாசிகள் கருத்தடை செய்வதை அனுமதிக்க
முடியாதிருக்கும் போது. சபை மேய்ப்பர்கள் இப்படிப்பட்ட காரியங்களுக்கு உடன் பட்டு
இருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது. இப்படியான தலைவர்களையுடைய சபைகளில்
விசுவாசிகளும் கருத்தடை செய்வதை சபைத்தலைவர் தடுக்க முடியாத ஒரு நிலைதான்
காணப்படுகிறது . விசுவாசிகளையும் தட்டிக்கொடுக்க வேண்டிய நிலைதான் நிலவுகிறது.
தட்டிக்கேட்க வேண்டியவர்கள் தவறு செய்தால். தட்டிக்கேட்கமுடியாது. தட்டிக்கொடுக்க
வேண்டிய நிர்பந்த நிலைதான் ஏற்படும். பலுகிப் பெருகும்படி தேவன் சொன்னார் என்று
சொல்லுகிறீர்கள்ரூபவ் அப்படியானால் பெற்றுக்கொண்டே
இருக்கிறதா? என்று ஒரு கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுவதற்கு
வாய்ப்பு உண்டு.
பிரியமான சகோதரியே சகோதரனே!
இச்சையடக்கமுள்ளவனாயிரு என்று வேதம் யாருக்குச் சொல்கிறது என்று எண்ணுகிறீர்கள்.
நமக்குத்தானே சொல்லுகிறது என்பது நாம் அறியாததா? இச்சையை அடக்கமுடியாமல்
கர்பத்தடை செய்வதா? இச்சையடக்கம் இல்லாதவனாயிருந்தால் அவன் எப்படி தேவ
ஊழியக்காரனாய் ஊழியக்காரியாய் இருப்பது? கர்ப்பத்தடைசெய்து கொள்வதாக
இருந்தாலும் மனைவிகள் தான் பெரும்பாலும் செய்து கொள்ளும்படி
நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்த சரீரம் தேவன் வாழும் ஆலயம். இந்த
ஆலயத்தை தேவனே வடிவமைத்திருக்கிறார். இந்த வடிவமைப்பில் எந்த மாறுதலையும் செய்து
கொள்வதற்கு நமக்கு அதிகாரமில்லை. தேவன் எல்லாவற்றையும் நேர்த்தியாக
செய்கிறவர் எதை எங்கு வைக்கவேண்டுமோ அதை அங்கு வைத்திருக்கிறார். யாத்திராகமமம்
25ம் அதிகாரத்திலிருந்து வாசித்துப் பாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் நடுவில் தேவன்
வாசம்பண்ண ஒரு கூடாரம் அமைக்கும்படி மோசேயிடம் சொல்கிறார். அந்தக்கூடாரத்தை
எப்படி அமைப்பது என்பதை எவ்வளவு துள்ளியமாக அளவு கணக்கோடு சொல்கிறார் என்று
பார்க்கவேண்டும். இதில் ஒன்றைக்கூட்டவோ குறைக்கவோ மோசேக்கு அதிகாரமில்லை.
அன்று கூடாரத்தில் வாசம்பண்ணிய தேவன் இன்று இந்த சரீரமாகிய ஆலயத்தில் வாசம்
பண்ணுகிறார். வேதமும் அப்படித்தான் செல்லுகிறது. 1கொரிந்தியர் 3:16 நீங்கள் தேவனுடைய
ஆலயமாயிருக்கிறீர்களென்றும் தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? இந்த சரீரமாகிய தேவனுடைய ஆலயத்தில் எந்த
மாற்றமும் செய்ய நமக்கு அதிகாரமில்லை. அப்படி மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள்
1கொரிந்தியர் 3:17ஐ வாசித்துப்பார்ப்பது நல்லது. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்
கெடுத்தால் அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது.
நீங்களே அந்த ஆலயம். நாம் குடியிருக்கும் வீட்டை எப்படி வேண்டுமானாலும்
மாற்றலாம். அலங்கரிக்கலாம். ஆனால் தேவன் குடியிருக்கும் வீட்டை(சரீரம்)
மாற்றியமைப்பதற்கு நமக்கு அதிகாரமில்லை. தேவன் அவர் விரும்பிய வண்ணமாகவே நம்மை
வடிவமைத்திருக்கிறார்.
வெளிப்படுத்தல் 1:6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும்
ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும்
உண்டாயிருப்பதாக. ஆமென்.
பிரியமானவர்களே!
தேவன் நம்மை ஆசாரியர்களாக்கியிருக்கிறார் ஆசாரியனுக்குரிய தகுதிகள் குறித்து
லேவியராகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. வசனம் 20ல்
கூனனானாலும் குள்ளனானாலும் பூவிழுந்த கண்ணனானாலும்
சொறியனானாலும் அசறுள்ளவனானாலும் விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.
வசனம்23 ஆனாலும் அங்கவீனமுள்ளவனாகையால் அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப்
பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில்
சேராமலும் இருப்பானாக நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல்
என்றார்.
இயற்கையாக ஒருவன் சந்ததி விருத்தி செய்ய முடியாதவனாகவோ அல்லதுஒரு விபத்தில் அப்படிப்பட்ட நிலையை
அடைந்தவனாகவோ இருந்தால் அல்லது வேறு காரணங்களினால் அப்படிப்பட்ட நிலையை
அடைந்திருந்தால் அவன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்
குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும்
இருப்பானாக என்பது கட்டளை. ஆனால் தெரிந்தே ஒருவன் தன்னை அந்தநிலைக்கு
உற்படுத்துவது அதாவது சந்ததிவிரித்தி செய்யமுடியாத நிலைக்கு தன்னை ஆளாக்கிக்
கொள்வது. தன்னை அங்கவினனாக்கிக் கொள்வதாகும். அப்படியானால் அவன் எப்படி
ஆண்டவருடைய பலிபீடத்தன்டை சேர முடியும். அது நியாயப்பிரமாண காலம் இப்போது
கிருபையின் காலம் என்று ஒருவேளை சொல்லக்கூடும். கிருபையின் காலத்தில் ஓருவேளை
இயற்கையாக அப்படிப்பட்ட நிலையிலிருக்கும் ஒருவனை தேவன் அனுமதித்தாலும்.
வலுக்கட்டாயமாக தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கிக் கொள்பவர்களை தேவன் மன்னிப்பார்
என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.
லேவியராகமம் 22:24 விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை
அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும்ரூபவ் அவைகளை உங்கள்
தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக. இந்தவசனத்தின்படி பலி செலுத்தப்படும்
மிருகங்களிள் அப்படிப்பட் குறையிருந்தாலே அதை பலியாக செலுத்தாதே என்று
சொல்லப்படுவதைப் பார்க்கலாம். மிருகங்களிள் கூட தேவன் அப்படிப்பட்டதை
விரும்பவில்லை. அப்டியானால் ரோமர் 12:1ல் சொல்லப்பட் இந்த ஆராதனையை எப்படி
செய்யமுடியும்
அப்படியிருக்க சகோதரரே நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான
ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு
உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள
ஆராதனை.
குறைபாடுகளோடு கூடிய சரீரத்தை எப்படி ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க முடியும்? பிறப்பிலேயே
குறை பாடுகளோடு நான் பிறந்திருந்தால் ஒரு வேளை ஆண்டவர்
ஏற்றுக் கொள்ளக்கூடும். ஆனால் நான் என்னை குறைபாடுள்ளவனாக மாற்றிக் கொண்டால்?
சிந்தித்துப்பாருங்கள். முடிவாக என்ன சொல்லுகிறேன் என்றால் தேவனுக்கு
பிரியமில்லாத காரியங்களை நாம் செய்யாமல் தேவனுக்கு பிரியமானவைகளை செய்யவே
அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவ சித்தத்தையறிந்து அவருடைய சித்தம்
செய்வோமானால் மத்தேயு 7:23 சொல்லப்பட்டது போல் நான் உங்களை அறியேன் என்று
சொல்லும் நிலையேற்படாது. அப்படியொரு நிலையேற்பட்டால் நம்முடைய
நிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்த்து நம்முடைய ஓட்டத்தை ஓடக்கடவோம்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
