தேவ வார்த்தைகள் நிறைவேறும் காலமல்லவா இது!
இணைப்பு - 1)இது உண்மைதானா? ஆம் நாளுக்கு நாள் விண்ணையும் தாண்டி போய்க்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளின் தொழில் நுட்ப புரட்சிகளில் இதுவும் ஒன்று.
இன்றெல்லாம் மனிதனுக்கு சமமாக ஏன் மனிதனை விட மேலான ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதனால்தான் என்னமோ மனிதன் ரோபோவை திருமணம் செய்யும் அளவுக்கு வந்து நிற்கின்றது தற்போது.
குறித்த காணொளியை பாருங்கள் அச்சு அசல் மனிதனை போலவே அசைவுகளை ஏற்படுத்துவது மனிதன் அல்ல..
ஐப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ. டென்மார்க்கை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரான Henrik Scharfe என்பரால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு - 2)
உலகின் மிகப் பிரமாண்டமான இராட்சத ரோபோச் சிலை சீனாவில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது..
இது 11 மீற்றர் உயரமும் 21 டொன் நிறையும் உடையன. பழைய வாகனங்களின் உதிரிப் பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பது இந்த ரோபோச் சிலையின் இன்னொரு சிறப்பு அம்சம்.
20 மோட்டர்ர் கார்களில் இருந்து பெறப்பட்ட பாகங்கள் பயன்பட்டு உள்ளன. அதுவும் சொந்த நாட்டுத் தயாரிப்புக்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடந்த 30 ஆம் திகதி இச்சிலை முழுமை பெற்றது.
சீனாவால் ஏற்கனவே அமைக்கப்பட்ட ரோபோச் சிலை ஒன்றே இதற்கு முன்னர் உலகின் மிகப் பிரமாண்டமான ரோபோச் சிலையாக இருந்தது. ஆனால் புதிய சிலையை விட ஒரு மீற்றர் உயரம் குறைவானது.
CHINA the biggest real one in the world

